Wednesday, June 22, 2005


புராதனக் கோட்டைகளையும்
இடிபாடுகளையும் மேவிச் செல்கிறது
ஒரு துயரமான கண்ணீர்த் துளி
"வந்து விடு"
கண்மூடி இறைஞ்சுகிறாள்
இதழ்கள் பிளந்துருகும்
முத்தத்தின் ஈரம்
எனக்கும் உனக்குமே பரிச்சயம்கொண்ட
பேரமைதி பெருகும் நீர்த் தடங்களிற்கு
அழைத்துச் செல்கிறது
ஒளியும் வர்ணங்களுமற்றது
என் உலகம்
வர்ணப்பூச்சிகளிற்கு
வாசனை மலர்களிற்கு
பரிச்சயமற்றதும் என் உலகம்.
குருதியும் தசையும்
என்புகளும் உருகி
உயிர்ப்பும் மூப்பும் வனப்பும்
ஒருங்கிசைவது.
"வந்துவிடு"
ஆழமான நீர்த்தடங்களிலிருந்தும்
வழுவி
உறையாது ஒளிர்கிறது கண்ணீர்
முலைகளும் இதழ்களாலும்
பேணப்படுகிற உலகைக் காண
குழந்தை தயாராகிவிடுகிறது
~


காலம் june 2005, இதழ் 24
படம் இங்கிருந்து:

2 Comments:

At Wed Jun 22, 03:30:00 PM PDT, Blogger aazhiyaal said...

மைதிலி, படமும் கவிதையும் மிக நன்றாக உள்ளன.

ஏன் தலைப்பே போடுகிறீர் இல்லை? பிறகு 10, 15 தலைப்பு இல்லாத கவிதைகளை ஒன்றாய் வைத்துக்கொண்டு தலைப்பு போடுவது எவ்வளவு கொடுமை என்று நான் சொல்ல வேண்டியதில்லை. சில சமயம் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நிற்கும்.

 
At Wed Mar 06, 09:36:00 PM PST, Blogger Ramesh DGI said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

 

Post a Comment

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது